நியூயார்க்கில் மின் சிகரெட் தடை

நியூயார்க்கில் மின் சிகரெட் தடை

1 mins read

நியூயார்க்: பல்வேறு சுவைகளில் வரும் மின் சிகரெட்டுகளை அமெரிக்காவின் நியூயார்க் நகரம் தடை செய்யவுள்ளதாக அந்நகர ஆளுநர் ஆண்ட்ரூ குவோமோ அறிவித்துள்ளார்.

அண்மையில் மின் சிகரெட்டை புகைத்ததால் நுரையீரல் பாதிக்கப்பட்டு சிலர் மாண்டதைத் தொடர்ந்து இந்தத் தடை நடப்புக்கு வரவுள்ளது. மின் சிகரெட்டு பிடிப்பது ஆபத்தானது என்று குறிப்பிட்ட குவோமோ, பழம், மிட்டாய் வகை சுவைகளில் வரும் மின் சிகரெட்டுகளால் இளையர்கள் ஈர்க்கப்படுவதாகச் சொன்னார்.

ஆனால் அதில் 'நிக்கொட்டின்' ரசாயனம் கலக்கப்பட்டிருப்பதைச் சுட்டிய அவர், அது அவர்களை அடிமைப்படுத்தும் என்று கூறினார்.