கொலம்பியாவில் விமான விபத்து; எழுவர் உயிரிழப்பு

கொலம்பியாவில் விமான விபத்து; எழுவர் உயிரிழப்பு

1 mins read
d2cedc49-09e4-44d2-9e71-f60af37c567f
பல வீடுகளின் மேற்கூரையின் மீது விழுந்து கிடக்கும் விமானத்தின் பாகங்கள். படம்: இபிஏ -

போபாயன்: கொலம்பியாவின் போபாயன் நகரத்தில் நேற்று முன்தினம் சிறிய விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் எழுவர் உயிரிழந்தனர். மலைகள் சூழ்ந்த நகரமான போபாயனில் 270,000 பேர் வசிக்கின்றனர்.

அங்கு உள்ள விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிய ரக விமானம் ஒன்று குடியிருப்புப் பகுதிக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது.

புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்து ஏற்பட்டதாகவும் விமானத்தில் இருந்த ஒன்பது பேரில் எழுவர் உயிரிழந்ததாகவும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் அந்நாட்டு விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

படுகாயம் அடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறைத் தலைவர் ஃபேபியன் கார்டனாஸ் தெரிவித்துள்ளார்.