ஹாங்காங்கில் ரயில் தடம் புரண்டு எட்டு பேர் காயம்

ஹாங்காங்கில் ரயில் தடம் புரண்டு எட்டு பேர் காயம்

2 mins read
d974bc56-dec2-474f-88d3-3a71d7d81709
ஹாங்காங்கில் முக்கிய ரயில் நிலையத்துக்கு அருகே மூன்று பெட்டிகள் தடம் புரண்டதால் எட்டுப் பேர் காயம் அடைந்தனர். படம்: ராய்ட்டர்ஸ் -

ஹாங்காங்கில் நடைபெற்று வரும் ஓயாத ஆர்ப்பாட்டங்களால் பொரு ளியல், நிலைத்தன்மை பாதிக்கப் பட்டுள்ள நிலையில் ரயிலும் சதி செய்துள்ளது.

நேற்று மிகவும் பரபரப்பான உச்ச நேரத்தில் பயணிகள் ரயில் ஒன்று தடம் புரண்டதால் எட்டுப் பேர் காயம் அடைந்தனர்.

சீனாவுடன் இணைப்புச் சேவையை வழங்கும் முக்கிய ரயில் நிலையமான கோவ்லூனில் உள்ள ஹங் ஹோம் ரயில் நிலையத்துக்கு அருகே ரயில் பெட்டிகள் தடம் புரண்டன.

ஏறக்குறைய மூன்று பெட்டிகள் தண்டவாளத்தைவிட்டு விலகி ஓடியதை சமூக ஊடகங்களில் வெளியான படங்கள் காட்டின.

தடம் புரண்ட பெட்டிகளில் அரைகுறையாக உடைந்து கிடந்த கதவு வழியாக வெளியேறிய பயணிகள் கிழக்கு ரயில் தண்ட வாளத்தைக் கடந்து பாதுகாப்பான இடத்துக்குச் சென்றனர்.

ரயில் விபத்தைத் தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட பயணிகள் ரயிலிலிருந்து வெளியேற்றப் பட்டதாக ரயில் அதிகாரிகள் தெரி வித்தனர்.

இதில் எட்டு பயணிகள் காயம் அடைந்தனர் என்று அவர்கள் கூறினர்.

ரயில் தடம் புரண்டதற்கான காரணம் உடனடியாகத் தெரிய வில்லை. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கு முன்பு ஜனநாயக ஆர்ப்பாட்டக்காரர்கள் ரயில் நிலையங்களை அடித்து நொறுக்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதால் இது ஒரு சதிச் செயலாக இருக் கும் என்ற சந்தேகிக்கப்பட்டது.

ஆனால் அதற்கான ஆதாரம் இருப்பதாகத் தெரியவில்லை.

இந்த நிலையில் ஊகங்களை அடிப்படையாக வைத்து கருத்து கூற விரும்பவில்லை என்று ஹாங் காங்கின் போக்குவரத்து தலைவர் ஃபிராங்க் சான் செய்தியாளர் களிடம் தெரிவித்தார்.

ஆனால் விபத்து காரணமாக இரு ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக ஹாங் காங்கின் ஒரே ரயில் நிறுவனமான எம்டிஆர் கார்ப்பரேஷன் கூறியது.

ஹாங்காங்கில் நான்காவது மாதமாக இம்மாதமும் தொடர்ந்து அரசியல் பதற்றம் நிலவுகிறது.

1997ல் ஹாங்காங்கை சீனாவிடம் பிரிட்டன் ஒப்படைத்தது.

அதன் பிறகு ஹாங்காங்கில் நடைபெற்று வரும் தொடர் ஆர்ப் பாட்டங்களால் சீனா பெரும் சவாலை எதிர்நோக்குகிறது.