டிரம்ப் கட்டடத்துக்குள் புகுந்த கார்

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கு சொந்தமான குடியிருப்புக் கட்டடத்தின் பிரதான அரங்குக்குள் பென்ஸ் கார் புகுந்ததில் அதன் ஓட்டுநர் உட்பட மூவர் காயமடைந்தனர்.

நியூயார்க் நகரில், அதிபர் டிரம்ப்புக்கு சொந்தமான ‘டிரம்ப் பிளாசா’ என்ற 40 மாடி கட்டடம் உள்ளது. இந்த சொகுசு குடியிருப்பு கட்டடத்தின் பிரதான அரங்குக்குள் நேற்று இரவு கட்டுப்பாட்டை இழந்து மெர்சிடிஸ் பென்ஸ் ரக கார் புகுந்தது.

இதில் காரின் முன்பக்கம் பலத்த சேதமடைந்தது. கட்டட வாயிலுக்கு இடையே சிக்கி நின்ற இந்த காரை அங்கிருந்தவர்கள் வெளியே இழுத்தனர். காரில் இருந்த மூவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

விபத்தைத் தொடர்ந்து கட்டடத்துக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!