டிரம்ப் கட்டடத்துக்குள் புகுந்த கார்

டிரம்ப் கட்டடத்துக்குள் புகுந்த கார்

1 mins read

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்குச் சொந்தமான குடியிருப்புக் கட்டடத்தின் பிரதான அரங்குக்குள் பென்ஸ் கார் புகுந்ததில் அதன் ஓட்டுநர் உட்பட மூவர் காயமடைந்தனர்.

நியூயார்க் நகரில், அதிபர் டிரம்ப்புக்குச் சொந்தமான 'டிரம்ப் பிளாசா' என்ற 40 மாடி கட்டடம் உள்ளது. இந்த சொகுசு குடியிருப்பு கட்டடத்தின் பிரதான அரங்குக்குள் நேற்று முன்தினம் இரவு கட்டுப்பாட்டை இழந்து மெர்சிடிஸ் பென்ஸ் ரக கார் புகுந்தது. இதில் காரின் முன்பக்கம் பலத்த சேதமடைந்தது. கட்டட வாயிலுக்கு இடையே சிக்கி நின்ற இந்த காரை அங்கிருந்தவர்கள் வெளியே இழுத்தனர். இந்த விபத்தில் அந்த மூவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.