இந்தோனீசியா: தீ வைத்ததாக 230 பேர் கைது

இந்தோனீசியா: தீ வைத்ததாக 230 பேர் கைது

1 mins read
3a1cbce7-1194-4224-81e8-d0ed75c9dd88
மலேசிய தீயணைப்பு மீட்புக் குழுவினர், பேராக் மாநிலத்தில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது தீக்கிரையான மூன்று மீட்டர் நீளமுடைய பாம்பு ஒன்றின் உடலை நேற்று கண்டுபிடித்தனர். படம்: பெர்னாமா -

காற்றுத் தீயைத் தொடங்கியதன் சந்தேகத்தில் இந்தோனீசிய போலிஸ் 230 பேரைக் கைது செய்துள்ளதாக நேற்று முன்தினம் தெரிவிக்கப்பட்டது.

கைதானவர்கள் சுமத்ரா, கலிமந்தான் ஆகிய பகுதிகளில் காட்டுத் தீச்சம்பவங்களைத் தொடங்கியதாகவும் அதனால் தென்கிழக்காசியா எங்கும் அடர்த்தியான புகைமூட்டம் பரவியுள்ளதாகவும் கூறப்பட்டது. தற்போதைய சுற்றுச்சூழல் சட்டத்தின்படி மரங்களை அழிக்க, தீ வைத்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக பத்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்படலாம்.

இதற்கிடையே ரியாவ், சுமத்ரா, கலிமந்தான் பகுதிகளில் செயற்கை மழையைப் பொழிய வைக்கும் நடவடிக்கையில் அவசரக்கால உதவிக் குழு நேற்று ஈடுபட்டதாக இந்தோனீசிய தேசிய பேரிடர் நிர்வாகக் குழு தெரிவித்தது. இதனால் கனத்த மழை ரியாவ்வில் அரை மணி நேரத்திற்குப் பெய்ததாகவும் கூறப்பட்டது.

இதன் தொடர்பில் சுமத்ராவின் புகைமூட்டம் மலேசியாவுக்குப் பரவியதாகவும் மேற்கு கலிமந்தானிலிருந்து சரவாக்குக்குப் பரவியதாகவும் இந்தோனீசியப் பேரிடர் நிர்வாகக் குழு கூறியது.