அமெரிக்க வானூர்தியால் 30 விவசாயிகள் கொலை

அமெரிக்க வானூர்தியால் 30 விவசாயிகள் கொலை

1 mins read
f5934635-c693-4560-b6c5-1c22d45025a5
-

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் பயங்கரவாதிகளைக் குறிவைத்து தாக்க ஏவப்பட்ட ஆளில்லா வானூர்தி அதற்குப் பதிலாக 30 கடலை விவசாயிகளைக் கொன்றது. அமெரிக்க ராணுவம் இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஆப்கானிஸ்தானின் அரசாங்கம் தெரிவித்தது.

புதன்கிழமை இரவு நடந்த இந்தத் தாக்குதலில் மேலும் 40 பேர் காயமடைந்தனர். விவசாயிகள் அனைவரும் கூடாரங்களில் உறங்கிக்கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதல் நடந்ததை ஆப்கானிஸ்தானின் தற்காப்பு அமைச்சு அமெரிக்க அதிகாரி ஒருவரும் உறுதி செய்தனர்.