பருவநிலை மாற்றத்தை எதிர்த்து உலகெங்கும் மக்கள் நேற்று போராட்டத்தில் இறங்கினர். பிரான்ஸ், ஜெர்மனி, கிரேக்கம், ஆஸ்திரேலியா, இந்தியா, ஆர்மேனியா, பிரிட்டன், கென்யா, செனகல் போன்ற நாடுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பூமியைப் பாதுகாக்கவும் பருவநிலை மாற்றத்துக்குக் காரணமான சுற்றுப்புற கேடுகளைத் தடுக்கவும் கோரி பதாகைகளை ஏந்தி அவர்கள் முழக்கமிட்டனர். ஆஸ்திரேலியாவில் மட்டும் ஏறத்தாழ 300,000 பேர் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
பருவநிலை மாற்றத்தை எதிர்த்து உலகெங்கும் போராட்டத்தில் இறங்கிய மக்கள்
1 mins read
ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட்டில் நடைபெற்ற போராட்டம். படம்: இபிஏ -

