பிலிப்பீன்ஸில் பன்றிக் காய்ச்சல் பரவும் அபாயம்

மணிலா: பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள பன்றிப் பண்ணைகளில் வளர்க்கப்படும் பன்றிகளின் ரத்தம் சோதித்துப் பார்க்கப்பட்டதில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் நோய்க் கிருமிகள் இருப்பது தெரியவந்துள்ளது.

இதனை அந்நாட்டு வேளாண் துறை நேற்று தெரிவித்தது.

மணிலா, கியூஸோன் ஆகிய இரண்டு நகரங்களில் உள்ள பண்ணைகளில் உள்ள பன்றிகளின் இரத்தம் பரிசோதித்துப் பார்க்கப்பட்டதாக விலங்குகள் துறைக்கான பேச்சாளர் திரு நோயெல் ரெயெஸ் கூறினார். உலகில் பன்றிகள் சாப்பிடும் நாடுகளில் பத்தாவது இடத்தில் உள்ள பிலிப்பீன்ஸ் ஏழாவது பெரிய பன்றி ஏற்றுமதியாளரும்கூட. பன்றிக் காய்ச்சலால் ஏற்பட்ட மரணங்களைத் தொடர்ந்து செப்டம்பர் 9ஆம் தேதி பன்றிக்காய்ச்சல் கிருமி பாதிப்பு குறித்து முதன்முதலில் கண்டறியப்பட்டது.

அதனையடுத்து மணிலாவின் கிழக்கு மாகாணமான ரிஸல் வட்டாரத்தில் மட்டும் 7,000க்கும் மேற்பட்ட பன்றிகள் கொல்லப்பட்டன.

பிலிப்பீன்ஸில் மேலும் அதிகமான பன்றிப் பண்ணைகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அங்குள்ள ரிஸல் வட்டாரத்தில் பன்றிக்காய்ச்சலால் மாண்ட பன்றிகள் சிலவற்றை, பன்றிப் பண்ணைப் பராமரிப்பவர்கள் ஆற்றில் தூக்கி வீசியெறிந்திருப்பர் என்று நம்பப்படுகிறது. இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பிலிப்பீன்ஸ் எச்சரித்துள்ளது. பண்ணைகளில் பன்றிகள் நோய்வாய்ப்பட்டிருந்தால் அதுகுறித்து வேளாண் துறைக்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என்றும் பன்றிப் பண்ணைகளை அத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான இங்கு கடந்த ஆண்டும் ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சல் தாக்கம் இருந்தது. அதில் இருந்து அங்குள்ள பன்றிகளைப் பாதுகாக்க ஏறக்குறைய S$5 பில்லியன் செலவிடப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!