ஹாங்காங்: ஹாங்காங்கில் சீன ஆதரவு குழுக்கள் போராட்டக்காரர்களின் எதிர்ப்புத் தடுப்புகளை அகற்றியதால் அதை எதிர்த்து ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று புதிய போராட்டத்தில் இறங்கினர்.
இதைக் கண்டித்து மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் பேரணியில் இறங்கினர். இவர்களைக் கலைக்கும் விதமாக காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர்.
ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவுப் போராட்டக்காரர்கள் நேற்று 'நியூ டெரிட்டரிஸ்' பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களைக் குறிவைத்து பேரணியில் குதித்தனர்.
அங்கு அவர்களில் சிலர் சீன அரசின் கொடிக்கு தீவைத்ததாக ராய்ட்டர்ஸ் செய்தித் தகவல் கூறுகிறது.
முன்னதாக, சீன ஆதரவுக் குழுக்களைச் சேர்ந்த பலர் ஹாங்காங்கில் ஜனநாயகத்தை ஆதரித்தும் சீன அரசாங்கத்தின் தலையீடு இருப்பதாகவும் கூறி போராட்டக்காரர்கள் ஏற்படுத்திய தடுப்புகளை தகர்த்தனர்.
சீன ஆதரவுக் குழுவினரை எதிர்த்த போராட்டக்காரர்களைப் பார்த்து சீன அரசின் ஆதரவாளர்களில் ஒருவர், "நான் சீன நாட்டவர்," என்று கூறியதாக செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேருந்து நிறுத்தங்கள், கடைத் தொகுதிகள், மேம்பாலங்களுக்கு அடியில், நடைபாதைகள் என ஆசிய நிதி மையமான ஹாங்காங் முழுவதும் இந்தத் தடுப்புச் சுவர்கள் பரவலாக வைக்கப்பட்டுள்ளன.
ஹாங்காங்கில் மூன்று மாதங்களாக நடைபெற்று வரும் போராட்டங்களில் பலவற்றுக்கு இந்த தடுப்புகளே காரணம் என்று கூறப்படுகிறது.
அங்கு தற்பொழுது மீட்டுக்கொள்ளப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களை சீனாவுக்கு நாடு கடத்த வழி செய்யும் சட்டம் இந்த ஆர்ப்பாட்டங்களைத் தொடங்கி வைத்தன.
அதையடுத்து, அனைவருக்கும் வாக்குரிமை உட்பட மேலும் பல கோரிக்கைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

