மகாதீர்: சத்தியம் காப்பேன்

மகாதீர்: சத்தியம் காப்பேன்

1 mins read

கோலாலம்பூர்: பிரதமர் பதவியிலிருந்து எப்போது விலகுவது என்பது குறித்து முழுமையான தகவல்களைத் நிச்சயம் கூடிய விரைவில் அறிவிக்கயிருப்பதாக நேற்று முன்தினம் மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது கூறியிருந்தார்.

தாம் பதவியை விட்டு விலக

இருக்கும் தேதியையும் நேரத்தையும் குறிப்பது உறுதி என்று மலேசிய அருங்காட்சியக நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அடுத்த ஆண்டு மே மாதத்தில் பிரதமர் பதவியைத் தாம் ஏற்கக்கூடும் என்று 'புளூம்பர்க்' தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் திரு அன்வார் இப்ராகிம் குறிப்பிட்டிருந்தார்.

வேறு யாரும் பிரதமர் பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்டதற்கான அறிகுறி இல்லை என்று பிகேஆர் கட்சியின் தலைவருமான திரு அன்வார் கூறியிருந்தார்.

குறிப்பாக, பொருளியல் விவகாரங்களுக்கான அமைச்சர் அஸ்மின் அலி அல்லது கெடாவின் முதலமைச்சரும் மகாதீரின் மகனுமான முக்ரிஸ் மகாதீர் அடுத்த பிரதமர் ஆகலாம் என்று எழுந்துள்ள ஊகங்கள் பொய் என்றார் திரு அன்வார்.