கெய்ரோ: எகிப்து அதிபர் அப்தல் ஃபட்டா அல் சிசியைப் பதவி விலகக் கோரி எகிப்து தலைநகர் கெய்ரோவில் பலர் ஆர்ப்பாட்டம் செய்தனர். தஹீர் சதுக்கத்தில் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி நேற்று அதிகாலை வரை நடத்தப்பட்ட அந்த ஆர்ப்பாட்டத்தைப் பாதுகாப்புப் படையினர் கலைத்தனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
அனுமதியில்லாது, போராட்டங்கள் நடத்த எகிப்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

