'தாப்பா' சூறாவளியால் விமான சேவைகள் பாதிப்பு

'தாப்பா' சூறாவளியால் விமான சேவைகள் பாதிப்பு

1 mins read
975ba1aa-8062-4328-951f-8a8c4d740dc7
படம்: இபிஏ -

ஜப்பானின் தென்தீவுகளில் வெள்ளத்தையும் ஒரு சிலருக்குக் காயத்தையும் ஏற்படுத்திவிட்டு, இப்போது முக்கிய தீவான ஹோன்சு நோக்கித் திரும்பியுள்ளது 'தாப்பா' சூறாவளி. நாகசாகி அருகே கரைகடந்த அந்தச் சூறாவளியால் மேற்கு ஜப்பானில் இன்று கனமழை பெய்து, வெள்ளம் ஏற்படலாம் என்றும் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்படலாம் என்றும் அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் கணித்து இருக்கிறது. சூறாவளியால் நூற்றுக்கணக்கான உள்நாட்டு விமானச் சேவைகள் நேற்று ரத்து செய்யப்பட்டன. தென்கொரியாவிலும் இத்தகைய பாதிப்பை அச்சூறாவளி ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப் பட்டது. (படத்தில்) 'தாப்பா'வால் தென்கொரியாவில் கரை ஒதுங்கிய படகு. படம்: இபிஏ