தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு காதலியிடம் கேட்ட ஆடவர் மரணம்

தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு காதலியிடம் கேட்ட ஆடவர் மரணம்

1 mins read
3bc86ad6-88c4-4fee-a05d-40d075a784a3
-

விடுமுறைக்காக டான்சேனியாவுக்குச் சென்றிருந்த அமெரிக்க ஆடவர், தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு காதலியைக் கேட்டிருந்தார். இதனை நூதனமாகச் செய்ய முயன்ற அந்த ஆடவர் இறுதியில் தண்ணீரில் மூழ்கி இறந்தார். அந்தத் தம்பதியர் தங்கியிருந்த விடுதியில் தண்ணீருக்கு அடியில் அமைக்கப்பட்டிருந்த அறை ஒன்று இருந்தது. அந்த அறைக்குள் இருந்த தனது காதலியைச் சன்னல் வழியாகக் காண விரும்பி வெப்பர், நீருக்குள் இறங்கினர்.

நீரில் இறங்கிய அவர், அறைக்குள் இருந்த தனது காதலியிடம் பிளாஸ்டிக் உறையிலுள்ள தனது கடிதத்தை அந்தச் சன்னலின் வழியாகக் காட்டினார். தன் காதலி மகிழ்ச்சி அடைந்ததைப் பார்த்த பின் வெப்பர் திருப்தியுடன் நீர்மட்டத்திற்கு ஏறிச்செல்ல முயன்றார். ஆனால் வெப்பர் உயிருடன் மேலே வரவில்லை. தன்னை மணக்க தனது காதலி சம்மதம் தெரிவித்ததும் இறுதியில் வெப்பருக்குத் தெரியாமலே போனது.