'தாமஸ் குக்' நிறுவனம் திவால்; நூற்றுக்கணக்கான பயணிகள் பாதிப்பு

'தாமஸ் குக்' நிறுவனம் திவால்; நூற்றுக்கணக்கான பயணிகள் பாதிப்பு

1 mins read
f3a94cbb-05a1-4bd3-95d4-2282367d144f
-

உலகின் ஆகப் பழைய பயண நிறுவனமான 'தாமஸ் குக்' திடீரென திவாலானதை அடுத்து நூற்றுக்கணக்கான பயணிகள் மாற்று பயண ஏற்பாடுகள் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.1841ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அந்நிறுவனம், அனைத்துலக சுற்றுப்பயணத் துறையை முன்னெடுத்துச் செல்லும் முக்கிய சக்தியாகத் திகழ்ந்தது. அந்நிறுவனம் மொத்தம் 16 நாடுகளில் ஹோட்டல்கள், உல்லாச விடுதிகள், விமானச்சேவைகள் ஆகியவற்றைப் பல்லாண்டுகளாக நடத்தி வந்தது.

'தாமஸ் குக்' மேலும் கடன்களைப் பெறுவதில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அது மூடப்பட்டுள்ளது.