'விஇபி' அமலாக்கத்தை மலேசியா ஒத்திவைத்தது

'விஇபி' அமலாக்கத்தை மலேசியா ஒத்திவைத்தது

2 mins read

அடுத்த மாதம் 1ஆம் தேதி முதல் தனது நில எல்லைகளில், அமல்படுத்தப்படவிருந்த உச்சநேர வாகன நுழைவு அனுமதி முறை பின்னொரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று மலேசியா நேற்று அறிவித்தது.

RFID எனும் அடையாளப் பட்டையைப் பொருத்திக்கொள்ளும் காலத்தைப் பதிவு செய்ய வாகனஓட்டிகளுக்கு ஏற்பட்டுள்ள இடைஞ்சல் உட்பட 'பல்வேறு காரணங்களுக்காக' இந்த முறை ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. இதன் விளைவாக உட்லண்ட்சுக்கு அப்பால் உள்ள சுல்தான் இஸ்கந்தர் குடிநுழைவு வளாகத்திலிருந்தும் துவாசுக்கு அப்பால் உள்ள சுல்தான் அபுபக்கர் குடி

நுழைவு வளாகத்திலிருந்தும் வெளிச்செல்லும் எல்லாப் போக்குவரத்தும் பாதிக்கப்படும் என்று மலேசிய போக்குவரத்து அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியது. எந்தெந்த நேரம் உச்சநேரமாகக் கருதப்படுகிறது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த மலேசிய போக்குவரத்து அமைச்சு, திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை காலை 5 மணி முதல் முற்

பகல் 11 மணி வரையிலும் இரவு 7 மணி முதல் 10 மணி வரையிலும், வெள்ளி, சனிக்கிழமைகளில் மாலை 4 மணி முதல் அடுத்த நாள் அதிகாலை 3 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 1 மணி முதல் 4 மணி வரையிலும் உச்சநேரமாகக் கருதப்படுகிறது என்று விளக்கியது. "இந்த ஒத்திவைப்பு காலத்தைப் பயன்படுத்திக்கொண்டு அனைத்து வெளிநாட்டு வாகன உரிமையாளர் களும் உடனடியாகத் தங்கள் வாகனங்களைப் பதிவு செய்து, RFID பட்டையைத் தங்கள் வாகனங்களில் பொருத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

"அப்போதுதான் விஇபி முறை அமல்படுத்தப்படும்போது அவர்கள் எவ்வித சிரமமின்றி மலேசியாவுக்குள் நுழையலாம், வெளியேற லாம்," என்றும் மலேசிய போக்குவரத்து அமைச்சு வலியுறுத்தியது. ஜோகூர் பாருவில் வெளிநாட்டு வாகன உரிமையாளர்கள் RFID பட்டையைத் தங்கள் வாகனங்களில் பொருத்திக்கொள்ள நான்கு இடங்களுக்குச் செல்லலாம். தெற்கு நோக்கிச் செல்லும் கெலாங் பத்தா ஓய்விடம், பிளாசா அங்சானா கடைத்தொகுதிக்கு எதிர்புறத்தில் உள்ள திறந்தவெளி கார் நிறுத்துமிடம், பாண்டான் ஓய்விடம், லிமா கெடாய் டோல் பிளாசா ஆகியவையே அந்த நான்கு இடங்கள்.

உச்சநேர வாகன நுழைவு அனுமதி முறை முதலில் 2007ஆம் ஆண்டில் முன்னைய தேசிய முன்னணி அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் மூலம் எத்தனை வெளிநாட்டு வாகனங்கள் மலேசியாவுக்கும் நுழைகின்றன என்பதைக் கணக்கிடுவதும் கார் திருட்டைத் தவிர்ப்பதும் அதன் நோக்கங்களாக இருந்தன. அக்டோபர் மாதம் 1ஆம் தேதி முதல் மலேசியாவுக்குள் நுழையும் வெளிநாட்டு வாகனங்களுக்கு கட்டாய பதிவு முறை அவசியம் என்று இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மலேசிய அரசாங்கம் அறிவித்தது.