கோலாலம்பூர்: 1எம்டிபி மோசடி வழக்கு தொடர்பாக ஜோ லோ என்றழைக்கப்படும் லோ டேக் ஜோவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்று மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் வழக்கறிஞர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
வழக்கு தொடர்பான உண்மைகளை அறிய, ஜோ லோவிடம் தாம் குறுக்கு விசாரணை நடத்த விரும்புவதாக திரு நஜிப்பின் வழக்கறிஞரான திரு முகம்மது ஷஃபி கூறினார்.
பிரதமர் பதவியைப் பயன்படுத்தி திரு நஜிப் பணம் கையாடியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகளை திரு நஜிப் மறுத்துள்ளார்.

