கலந்துரையாடல் நடைபெற விடுங்கள்; கேட்டுக்கொண்ட கேரி லாம்

கலந்துரையாடல் நடைபெற விடுங்கள்; கேட்டுக்கொண்ட கேரி லாம்

1 mins read
1f9782cc-2b0a-4f7c-94dc-82363897833c
பொது கலந்துரையாடல் கூட்டத்துக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் என ஹாங்காங் தலைவர் கேரி லாம் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். கோப்புப் படம்: எஸ்டி -

ஹாங்காங்: இன்று நடைபெறும் தமது முதல் பொது கலந்துரையாடல் கூட்டத்துக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் என ஹாங்காங் தலைவர் கேரி லாம் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். 150 பேர் கலந்துகொள்ள இருக்கும் கலந்துரையாடலுக்கு ஏறத்தாழ 20,000 பேர் பதிவு செய்திருப்பதாக அவர் கூறினார். சீன தலையீட்டைச் சாடியும் ஹாங்காங்கிற்குக் கூடுதல் ஜனநாயக உரிமை வேண்டும் என்று கோரியும் கடந்த சில மாதங்களாக ஹாங்காங்கில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஆர்ப்பாட்டக்காரர்களை போலிசார் அடித்து துன்புறுத்துவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளைத் திருவாட்டி லாம் மறுத்துள்ளார்.