சோல்: ஊட்டச்சத்து சிகிச்சை பெறுவதற்காக தனியார் மருந்தகத்திற்குச் சென்ற பெண்ணுக்குக் கருக்கலைப்பு செய்த சம்பவம் தென்கொரியாவில் நிகழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் வியட்னாம் நாட்டவர் என்றும் அவர் ஆறு வார கர்ப்பமாக இருந்தார் என்றும் கூறப்பட்டது. கருச்சிதைவு ஏற்பட்ட இன்னொரு பெண்ணுக்குப் பதிலாக அந்த வியட்னாமியப் பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து, கருக்கலைப்பு செய்ததற்கு மருத்துவ ஆவணங்கள் மாறியதே காரணம் என உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவித்தன.
ஆள் மாற்றிக் கருக்கலைப்பு
1 mins read

