ஆணுறை விநியோகிப்பாளர் மீது கர்ப்பிணி வழக்கு

1 mins read
6d7b5bef-d533-42a9-bfc6-f9353a043955
படம்: இணையம் -

சூசோவ் (சீனா): இணையம் வழி ஆணுறை வழங்கும்படி கோரியிருந்த சீனப் பெண் ஒருவர், அது வரும் வரும் எனக் காத்திருந்தார்.

ஆனால், அந்த விநியோக நிறுவனம் கூறியதுபோல சரியான நேரத்திற்கு அது கைக்கு வந்து சேரவில்லை.

எட்டு நிமிடங்கள் தாமதமாகக் கிடைத்த ஆணுறையால் பயனின்றிப் போய்விட்டது.

அப்போது 'சரி போகட்டும்' என்று விட்டுவிட்ட அந்தப் பெண், ஒரு மாதத்திற்குப் பின் தான் கருவுற்றிருப்பதை அறிந்ததும் கோபமடைந்தார். முதலில் 20 நிமிடங்களுக்குள் ஆணுறையைக் கொண்டு வந்து சேர்ப்பதாக அந்நிறுவனம் கூறியது. இதையடுத்து, குளியலறைக்குள் புகுந்தார் அந்தப் பெண்.

குளித்துவிட்டு வந்து பார்த்தபோது, மோசமான வானிலை காரணமாக சற்று தாமதமாகலாம் என்று தகவல் வந்திருந்தது.

ஆணுறை வந்து சேர்வதற்குள் எல்லாம் ஆகிவிட்டது.

"எனக்கு இந்த நிலை ஏற்பட, குறித்த நேரத்தில் ஆணுறை கிடைக்காததே காரணம்.

மருத்துவச் செலவுகளுக்காகவும் கருவுற்றிருப்பதற்காகவும் அந்த விநியோகிப்பாளர் எனக்கு 30,000 யுவான் (S$5,804) இழப்பீடு தர வேண்டும்," என்று வழக்குத் தொடுத்துள்ளார் குமாரி சூ என்ற அந்தப் பெண்.

இதுபோன்ற வழக்கு தன்மீது பாயும் என ஒருபோதும் எதிர்பார்த்திருக்க மாட்டார் அந்த விநியோகிப்பாளர்.