பிரான்சின் வடபகுதியில் இருக்கும் ருவான் நகரில் உள்ள ஒரு வேதி ஆலையில் நேற்று முன்தினம் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, அந்தப் பகுதியில் இருக்கும் பள்ளிகள் மூடப்பட்டன. மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப் பட்டனர். கிட்டத்தட்ட 200 தீயணைப்பாளர்கள், 60 தீயணைப்பு வாகனங்களுடன் போராடி தீயை அணைத்தனர். அமெரிக்காவின் 'லூப்ரிஸால்' நிறுவனத்திற்குச் சொந்தமான ஆலையில் ஏற்பட்ட தீயால் வேதிப்பொருள் கசிவு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் இதனால் அதனருகே ஓடும், பிரான்சின் பெரிய ஆறுகளில் ஒன்றான செய்ன் ஆறு மாசு அடையலாம் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். படம்: ஏஎஃப்பி
பிரான்ஸ் வேதி ஆலையில் தீ; பள்ளிகள் மூடப்பட்டன
1 mins read
பிரான்சின் வடபகுதியில் இருக்கும் ருவான் நகரில் உள்ள ஒரு வேதி ஆலை. படம்: ஏஎஃப்பி -

