இஸ்லாமாபாத்: சமூக ஊடகங்களில் பிரபலமாக வலம் வந்த கந்தீல் பலூச், 26, என்ற பாகிஸ்தானிய இளம்பெண் கொலை செய்யப்பட்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அதன் தொடர்பில் அவரின் சகோதரருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. 2016 ஜூலை மாதம் கந்தீலைக் கழுத்தை நெரித்துக் கொன்றதாக அவரின் சகோதரர் வாசிம் ஒப்புக்கொண்டார். கந்தீல் தமது குடும்பத்திற்கு அவமானத்தைத் தேடித் தந்ததால் அவரைக் கொலை செய்ததாக வாசிம் கூறினார். உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இவ்வழக்கில் கந்தீலின் மற்ற இரு சகோதரர்கள் உட்பட அறுவர் விடுவிக்கப்பட்டனர்.
பாகிஸ்தான் அழகி கொலை: சகோதரருக்குச் சிறைத்தண்டனை
1 mins read

