சங்கிலியில் கட்டிப் போடப்பட்டிருந்த 300க்கும் மேற்பட்டோர் விடுவிப்பு

சங்கிலியில் கட்டிப் போடப்பட்டிருந்த 300க்கும் மேற்பட்டோர் விடுவிப்பு

1 mins read

கடுனா (நைஜீரியா): சங்கிலியால் கட்டப்பட்டு, கட்டடம் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்த முன்னூற்றுக்கும் மேற்பட்டோரை நைஜீரிய போலிசார் விடுவித்தனர். அவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள். அவர்களின் கால்களை உலோகத்தால் ஆன சங்கிலிகளால் பிணைத்து இருந்ததாகச் சொல்லப்பட்டது. நைஜீரியாவின் வடபகுதியில் உள்ள கடுனா நகரில் அமைந்து இருக்கும் அந்தக் கட்டடத்தில் இஸ்லாமியப் பள்ளி ஒன்று செயல்பட்டு வந்ததாகவும் இதன் தொடர்பில் எழுவர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் போலிஸ் தெரிவித்தது.