சுற்றுப்பயண விசா: சவூதி முடிவு

சுற்றுப்பயண விசா: சவூதி முடிவு

1 mins read

ரியாத்: வெளிநாட்டவர்கள் தங்களது நாட்டிற்குச் சுற்றுலா வருவதை அனுமதிக்கும் விதமாக முதன்முறையாக சுற்றுப் பயண விசா வழங்க சவூதி அரேபியா முடிவு செய்துள்ளது. நாட்டின் பொருளியலுக்கு எண்ணெய்யை மட்டும் சார்ந்து இருக்காமல் வருமானத்திற்கான வேறு வழிகளையும் ஆராய்ந்து வரும் சவூதி அரசு, சுற்றுலாப் பயணிகளுக்குக் கதவைத் திறந்துவிட்டிருப்பதை "வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்," என்று அதன் பயணத்துறைத் தலைவர் அகமது அல் காத்தீப் குறிப்பிட்டார்.