எல்லை தாண்டிய வடகொரியப் படகு: சுட்டு எச்சரித்த தென்கொரியா

எல்லை தாண்டிய வடகொரியப் படகு: சுட்டு எச்சரித்த தென்கொரியா

1 mins read

சோல்: தனது கடல் பரப்பிற்குள் நுழைந்த வடகொரியப் படகை நோக்கி, தென்கொரியா துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கை விடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதன்பிறகு, கோளாறான அப்படகின் இயந்திரத்தைப் பழுதுபார்ப்பதற்காக தனது கடற்படையின் இயந்திரத் தொழில்நுட்பர் ஒருவரையும் தென்கொரியா அனுப்பி வைத்தது. நேற்று முன்தினம் மாலை இச்சம்பவம் நிகழ்ந்தது. அந்த மரப்படகில் நால்வர் இருந்தனர் என்றும் நான்கு மணி நேரத்திற்குப் பிறகு வடகொரியாவை நோக்கி அது திரும்பிச் சென்றது என்றும் தெரிவிக்கப்பட்டது.