நியூயார்க்: எந்தவொரு நாட்டின் மீதும் விதிக்கப்படும் பொருளியல் தடைகளைக் கட்டுப்படுத்த அனைத்துலகக் கட்டுப்பாடு தேவை என மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது ஐக்கிய நாடுகள் மன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.ஈரானுடன் வர்த்தகம் புரியும் நாடுகளைத் தடுக்கும் அமெரிக்காவின் செயலை அவர் குறைகூறினார்.
"எந்த மாதிரியான சட்டங்களின் அடிப்படையில் தடைகள் விதிக்கப்படுகின்றன என்பது நமக்குத் தெரிவதில்லை.
"பணக்கார, வலிமை மிகுந்த நாடுகளுக்கு மட்டுமே அதன் மூலம் பயன்பெறுவது போலத் தோன்றுகிறது," என்று 94 வயது மகாதீர் ஐநா பொதுச் சபையில் வெள்ளிக்கிழமை உரையாற்றியபோது குறிப்பிட்டார்.
"பொருளியல் தடைகளை விதிக்க விரும்பினால் அதனை உள்ளடக்கிய சட்டத்தை நாம் பெற்றிருக்க வேண்டும்.
ஒரு நாட்டின் மீது தடைகளை விதிக்கும்போது அதன் மூலம் மற்ற நாடுகளும் தடைக்கு உள்ளாகின்றன என்பதே உண்மை. குறிப்பாக, ஈரான் மீது பொருளியல் தடைகளை விதித்தபோது மலேசியாவும் இதர நாடுகளும் பெரியதொரு சந்தையை இழந்தன.
பன்னாட்டு அணுவாயு ஒப்பந்ததத்தை மீறியதற்காக ஈரானின் வட்டார செல்வாக்கை வீழ்த்தும் வகையில் அதன் மீது அமெரிக்கா பொருளியல் தடைகளை விதித்து.

