மணிலா: தென்பிலிப்பீன்ஸில் நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கம் காரணமாக மத்திய இந்தோனீசியாவில் உள்ள வடசுலாவேசியிலும் அதிர்வுகள் உணரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி ஏற்படும் அபாயம் இல்லை என்று அறிவிக்கப்பட்டது.
கடந்த வியாழக்கிழமையன்று இந்தோனீசியாவின் அம்போன் மாநிலத்தை 6.5 அளவிலான நிலநடுக்கம் உலுக்கியது.
அதன் காரணமாக குறைந்தது 30 பேர் மாண்டனர். 156 பேர் காயம் அடைந்தனர்.
அதுமட்டுமல்லாது, நிலநடுக்கம் காரணமாக அம்போன் மாநிலத்தின் உள்கட்டமைப்பு மிக மோசமான அளவில் சேதமடைந்தது.

