காணாமல்போன கைக்குழந்தையைச் சடலமாகக் கண்டு மனம் வெம்பிய பெற்றோர்

காணாமல்போன கைக்குழந்தையைச் சடலமாகக் கண்டு மனம் வெம்பிய பெற்றோர்

1 mins read
4ca0188a-3b80-4336-b2c5-135707ab750e
-

தாய்லாந்தில் ஆண் குழந்தையின் சடலம் ஒன்று அது குடியிருந்த வீட்டின் பின்பக்கத்தில் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டது. நான்கு நாட்களுக்கு முன்னர் (செப்டம்பர் 26ஆம் தேதி) அதன் தாயார் வீட்டிலுள்ள கழிவறைக்குச் சென்று திரும்பி வருவதற்குள் அக்குழந்தையைக் காணவில்லை. பிறந்து 18 நாட்களே ஆன 'ஐஎல்' என்ற அந்தக் குழந்தையுடன் தாயாரின் பணப்பையும் காணாமல் போய்விட்டதாக மலேசியாவின் 'தி ஸ்டார்' பத்திரிகை தெரிவித்துள்ளது.

கழிவறைக்குள் பத்து நிமிடங்களுக்கு மட்டுமே தாம் இருந்ததாக கூறிய அந்தத் தாயார், உதவிக்காகத் தமது சகோதரியைத் தொலைபேசிவழி அழைத்தார். ஆனால், அவர்களால் அந்தக் குழந்தையையோ பணப்பையையோ கண்டுபிடிக்க முடியவில்லை. சந்தேக நபருக்கான எந்த அறிகுறியும் அவர்களுக்குத் தென்படவுமில்லை. குழந்தையை எடுத்துச் சென்றவர்கள் அதனைத் தங்களிடம் திருப்பித் தருமாறு கோரும் ஃபேஸ்புக் பதிவு ஒன்றை தாயாரின் சகோதரி வெளியிட்டார். இன்று காலை 6 மணிக்கு அந்தக் குழந்தையின் சடலத்தை அதன் தந்தை வீட்டின் பின்பக்கத்தில் கண்டுபிடித்தார். துயரத்தால் மனமுடைந்துபோன தந்தையால் சாப்பிடவோ தூங்கவோ முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

இச்சம்பவத்தை அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.