போராட்டம் மிகக் கடுமையான பதிலடியை ஏற்படுத்தும்

போராட்டம் மிகக் கடுமையான பதிலடியை ஏற்படுத்தும்

2 mins read
f31214fc-7fd1-4db0-aa8e-3041be976614
சீனாவின் 70ஆம் ஆண்டு நிறைவு நாளான இன்று போராட்டம் நடத்துவதன் தொடர்பில் ஹாங்காங்கில் நேற்று ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டக் காரர்கள் செய்தியாளர் கூட்டத்தை நடத்தினர். படம்: ஏஎஃப்பி -

ஹாங்காங்: கம்யூனிச சீனாவின் 70ஆம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்கள் இன்று நடைபெறவிருக்கும் வேளையில், ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால், அதன் பதிலடி மிக, மிக ஆபத்தாக முடிவடையும் என்று ஹாங்காங் போலிஸ் நேற்று எச்சரிக்கை விடுத்தது.

"எங்களுக்குக் கிடைத்த தகவலின் படி நாளை (அக்டோபர் 1) போராட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கிறோம். அப்படி ஏதாவது நடந்தால் அதன் பதிலடி மிகக் கடுமையாக இருக்கும்," என்று ஹாங்காங் போலிஸ் சூப்ரின்டென்டண்ட் ஜான் சூ தெரிவித்தார்.

"போராட்டத்துக்கு மூலக் காரணமானவர்கள் தங்கள் வன்முறையை அதிகரித்துள்ளனர். அதன் ஆழத்தையும் விரிவாக்கத்தையும் வைத்து பார்க்கையில் அது பயங்கரவாதத்தை ஒத்திருக்கிறது," என்றும் திரு ஜான் கூறினார்.

போராட்டம் நிறைந்த வார இறுதியை அடுத்து ஹாங்காங்கின் மெட்ரோ ரயில் நிலையங்கள் நேற்று திறக்கப்பட்டன. இன்று நடைபெறும் ஆர்ப்பாட் டங்கள் சீன மத்திய அரசாங்கத்தின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்திவிடும் என்ற காரணத்தால், சீனா அதைக் கடுமையாக பார்க்கிறது.

கடந்த வார இறுதி ஆர்ப்பாட் டங்களுக்குப் பிறகு ஹாங்காங்கை 'சுத்தம்' செய்யும் பணி நேற்று முழு வீச்சில் நடத்தப்பட்டது. சீனாவின் தேசிய தினத்தின் முதல் நாளான நேற்று நாடெங்

கிலும் கடைகள் அடைக்கப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கேட்டுக்கொண்டனர். அதைப் பொருட்படுத்தாமல் நேற்று பல கடைகள் திறக்கப்பட்டு, வர்த்தகம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டங்களுக்கு மூலக் காரணமானவர்களில் இருவரான நடிகர் கிரேகரி வோங்கும் வெண் டஸ் லாவும் கைது செய்யப்பட்ட னர் என்று ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்த குடிமை மனித உரிமை குழு கூறியது.

ஆனால் அவர்களின் கைது நடவடிக்கையை ஹாங்காங் போலிஸ் உறுதிப்படுத்தவில்லை. சீன தேசிய தினக் கொண்டாட்டங்கள் நடைபெறும் ஹாங்காங் மாநாட்டு மையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஹாங்காங்கில் இன்று நடைபெறும் சீனாவின் தேசிய தினக் கொண்டாட்டங்களில் அதன் தலைமை நிர்வாகி திருவாட்டி கேரி லாமுக்குப் பதிலாக ஹாங்காங் நிர்வாகத்தின் தலைமைச் செய லாளர் மேத்யூ சியுங் கின் சுங் கலந்துகொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டது.