கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது ஈராண்டு காலத்திற்குள் பிரதமர் பொறுப்பை அன்வார் இப்ராஹிமிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற திட்டம் எதையும் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி வகுக்கவில்லை என அந்நாட்டின் இளையர், விளையாட்டுத்துறை அமைச்சர் சையது சாடிக் அப்துல் ரஹ்மான் கூறியுள்ளார்.
பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியின் தலைவர் மன்ற உறுப்பினருமான திரு சையது சாடிக், ஒப்பந்தம் கையெழுத்தானபோது தாம் உடன் இருந்ததாகக் கூறினார்.
பிரதமர் பொறுப்பை ஒப்படைப்பதில் டாக்டர் மகாதீர் காலதாமதம் செய்து வருவது குறித்து மூத்த அரசியல்வாதி சையது உசேன் அலி அவரை சாடியிருந்தார்.
பிரதமர் பதவியை அன்வாரிடம் ஒப்படைக்கும் விவகாரத்தில் டாக்டர் மகாதீர் முன்னுக்குப்பின் முரணாக பேசி வருவதாக அவர் கூறியிருந்தார்.
திரு உசேன் அலியின் குறைகூறலை வரம்பு மீறிய அரசியல் பேச்சாக கருதிய திரு சையது சாடிக், அதற்குப் பதிலளிக்கும் விதமாக டாக்டர் மகாதீரை நேற்று தற்காத்துப் பேசினார்.

