தஞ்சோங் பியாய் இடைத்தேர்தல்: நவம்பர் 16ஆம் தேதி வாக்களிப்பு

தஞ்சோங் பியாய் இடைத்தேர்தல்: நவம்பர் 16ஆம் தேதி வாக்களிப்பு

1 mins read
f4eda56c-8893-4c5e-a2cd-53a39a6acd31
-

புத்ரா ஜெயா: மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்படும் மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தின் தஞ்சோங் பியாய் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்களிப்பு நவம்பர் 16ஆம் தேதி நடைபெறும் என மலேசியத் தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.

தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நவம்பர் 2ஆம் தேதி நடைபெறும் என்றும் ஆணையம் தெரிவித்தது. முன்கூட்டியே வாக்களிப்பவர்களுக்கான தேதி நவம்பர் 12ஆம் தேதியாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த மாதம் 21ஆம் தேதி பெர்சாத்துக் கட்சியைச் சேர்ந்த டாக்டர் முகம்மது ஃபாரிட் காலமானதைத் தொடர்ந்து அந்த நாடாளுமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. மலேசியாவில் தற்போது நிலவி வரும் அரசியல் நெருக்கடியில் இந்த இடைத்தேர்தல் முக்கியமான தேர்தலாக கருதப்படுகிறது.

பக்கத்தான் ஹரப்பான் கூட்டணிக்கும் அம்னோ-பாஸ் கூட்டணிக்கும் இடையில் தற்போது நிலவி வரும் சமய ரீதியிலான விவகாரங்களும் மலேசிய அரசியலின் சூழலை மாற்றியமைத்துள்ளன. இப்படி மாற்றம் கண்டுள்ள அரசியல் சூழ்நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இடைத்தேர்தல் இரு தரப்பினரும் தங்களின் பலத்தைக் காண்பிக்கும் ஒரு தளமாக மாறிவிட்டது.

மொத்தம் 52,986 வாக்காளர்கள் இந்த இடைத்தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.