பாப்புவா நியூ கினியில் எரிமலை வெடித்தது

பாப்புவா நியூ கினியில் எரிமலை வெடித்தது

1 mins read
0b3d8ac4-4e5d-47dd-9690-001d9070892d
நெருப்புக் குழம்பைக் கக்கிய எரிமலை. படம்: கிறிஸ்தஃபர் லசிகா -

கோக்கோபோ: பாப்புவா நியூ கினியில் நேற்று எரிமலை வெடித்ததில், அப்பகுதியின் சுற்று வட்டாரத்தில் வசிக்கும் மக்கள் வீடுகளிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பிஸ்மார்க் தீவுகளுக்கு அருகில் உள்ள உலவுன் எரிமலை கடைசியாக கடந்த ஜூன் மாதம் வெடித்தபோது பாதுகாப்பு காரணங்களுக்காக சுமார் 13,000 பேர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அண்மையில் வீடு திரும்பிய அவர்கள், நேற்று அதிகாலை 4.30 மணியளவில் ஏற்பட்ட எரிமலை சீற்றத்தால் மீண்டும் வெளியேற்றப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

மலை அடிவாரத்திலிருந்து சுமார் 100 மீட்டர் உயரத்திற்கு எரிமலைக் குழம்பை அது கக்கியதாகக் கூறப்பட்டது. வானத்தில் சாம்பல் கலந்த புகை மலையிலிருந்து கிளம்பிய காட்சியை அப்பகுதியில் வசிப்பவர்கள் கண்டனர். உலவுன் எரிமலை உலகின் ஆபத்துமிக்க எரிமலைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.