குள்ள யானை ஒன்றின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ஆறு சந்தேக நபர்கள், விசாரணைக்காக இன்று முதல் நான்கு நாட்களுக்குத் தடுப்புக்காவலில் வைக்கப்படுவர்.
சந்தேக நபர்களில் ஐவர் உள்ளூர்க்காரர்கள் என்றும் ஒருவர் கள்ளக்குடியேறி என்றும் 'த ஸ்டார்' பத்திரிகை தெரிவித்துள்ளது. அவர்கள் 48 வயதுக்கும் 68 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். அந்த அறுவரில் இருவர், சாபாவின் கலபக்கான் என்ற ஊரிலுள்ள அந்த யானை வாழும் காட்டின் பாதுகாவலாளிகளாக உள்ளனர்.
அருகிவரும் இனத்தைச் சேர்ந்த அந்த யானை கிட்டத்தட்ட 70 துப்பாக்கித் தோட்டாக்களால் சுடப்பட்டதாக முன்னைய செய்தி அறிக்கைகள் குறிப்பிட்டன.
கைது நடவடிக்கையின்போது போலிசார் மூன்று துப்பாக்கிகளையும் 100 தோட்டாக்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

