மகாதீர்: பதவி ஒப்படைக்க தேதி குறிப்பது சிரமம்

மகாதீர்: பதவி ஒப்படைக்க தேதி குறிப்பது சிரமம்

1 mins read
8cae82fc-3591-40e3-b61f-319d70be596c
-

புத்ராஜெயா: அன்வார் இப்ராஹிமிடம் பிரதமர் பதவியை ஒப்படைக்க குறிப்பிட்ட தேதி ஒன்றை அறிவிப்பது சிரமம் என்று மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்துள்ளார்.

தமது பணிகளை முடித்த பிறகே அன்வாரிடம் பிரதமர் பதவியை ஒப்படைக்கப் போவதாகவும் அவர் கூறினார்.

"நிலைமையை நாங்கள் ஆராய வேண்டும். எனது பணிகள் இன்னும் நிறைவடையவில்லை. இன்னும் பாதி நிலையில் இருக்கின்றன. இப்படி இருக்கையில், அன்வாரிடம் பிரதமர் பதவியை ஒப்படைக்கும் தேதியை நிர்ணயிப்பது சிரமம்," என்று டாக்டர் மகாதீர் நேற்று தெரிவித்தார்.