ரோஹிங்யா அகதிகள் முகாமில் சிறுமி பலாத்காரம்

ரோஹிங்யா அகதிகள் முகாமில் சிறுமி பலாத்காரம்

1 mins read
bd8994e6-1bdf-4ea9-abbc-9a2dfd3a8fa5
-

பங்ளாதேஷின் கோக்ஸ் பஸாரில் 12 வயது அகதிச் சிறுமியை அந்நாட்டு ராணுவத்தினரே பாலியல் பலாத்காரம் செய்ததாக மலேசியாவில் தளம்கொண்டுள்ள ரோஹிங்யா அகதிகள் மனித உரிமை ஆர்வலர் குழு குற்றம் சாட்டியுள்ளது.

பெண்களையும் சிறார்களையும் அரவணைத்துப் பாதுகாக்க வேண்டிய அகதி முகாம்களிலும் அவர்கள் ஆபத்தை எதிர்நோக்குவதை இச்சம்பவம் காட்டுவதாக அந்தக் குழுவின் தலைவர் ஸஃபார் அகமது அப்துல் கனி தெரிவித்துள்ளார். பங்ளாதேஷில் அகதிகள் கையாளப்படும் விதம் குறித்து கேள்வி எழுப்பிய திரு ஸஃபார், பாதிக்கப்பட்ட சிறுமிக்குப் பாதுகாப்பு மற்றும் மனநல ஆலோசனை அளிக்கப்படுகிறதா எனக் கேட்டுள்ளார். இது குறித்து பங்ளாதேஷிய அரசாங்கம் உடனே விசாரணை நடத்தவேண்டும் என அவர் கோரியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை பங்ளாதேஷிய ராணுவம் மிரட்டி வாயடைத்திருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து ராணுவம் விசாரணை நடத்தவுள்ளதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்தது.