விழுந்து நொறுங்கிய சரக்கு விமானம்; குறைந்து நால்வர் பலி

விழுந்து நொறுங்கிய சரக்கு விமானம்; குறைந்து நால்வர் பலி

1 mins read
734633d5-4696-4467-9b5f-baed6fd2e57a
(படம்: ராய்ட்டர்ஸ்) -

உக்ரேனைச் சேர்ந்த சரக்கு விமானம் விழுந்து நொறுங்கியதில் குறைந்தது நான்கு விமானப் பணியாளர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஸ்பெயினிலிருந்து புறப்பட்ட அந்த 'அண்டோனொவ்-12 ' விமானம், கிழக்கு உக்ரேனிலுள்ள லவியு நகர விமான நிலையத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. லவியு விமான நிலையத்திலிருந்து அது 13.7 கிலோமீட்டர் தூரம் இருந்தபோது ரேடார் கருவியின் கண்காணிப்பிலிருந்து உள்ளூர் நேரம் காலை 7.10 மணிக்கு திடீரென மறைந்ததாக அவசர சேவை அதிகாரிகள் தெரிவித்தனர்.

விமான நிலையத்திலிருந்து 1.5 கிலோமீட்டர் தூரத்தில் தரையில் விழுந்த சரக்கு விமானத்தில் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

விமானம் விழுந்ததற்கு முன் அது அவசரமாகத் தரையிறங்கியதாகக் கூறப்படுகிறது. எரிபொருள்' தீர்ந்தது தொடர்பில்' அந்த விமானம் அவசரமாகத் தரையிறங்க வேண்டியிருந்ததாக உக்ரேனிய உள்கட்டமைப்பு அமைச்சர் விளாடிஸ்லாவ் க்ரிக்லீ ஃபேஸ்புக்கில் தெரிவித்தார்.