மணிலா: பிலிப்பீன்ஸில் உள்ள கடற்கரை சொகுசு விடுதியிலிருந்து பிரிட்டிஷ் ஆடவரையும் அவரது பிலிப்பினோ மனைவியையும் அடையாளம் தெரியாத துப்பாக்கிக்காரர்கள் நேற்று முன்தினம் இரவு கடத்திச் சென்றதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
70 வயது திரு எலன் ஆர்தர் ஹைரோன்ஸையும் அவரது மனைவியான வெல்மா பக்லினாவான் ஹைரோன்ஸையும் ஆறு பேர் கடத்தியதாக தெரிவிக்கப்பட்டது.

