ஷா ஆலம்: உதவிகளுக்கு எப்போதும் அரசாங்கத்தையே நம்பியிருக்கும் போக்கிலிருந்து விலகி, கிடைக்கும் வாய்ப்புகளைப் பற்றிக்கொண்டு வாழ்க்கையில் முன்னேறி, இழந்த கண்ணியத்தை மலேசியாவின் மலாய் சமூகத்தினர் மீட்டுக்கொள்ள வேண்டும் என்று மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது அறைகூவல் விடுத்துள்ளார்.
நேற்று முன்தினம் மலேசியாவின் வளப்ப பகிர்வு தொலைநோக்கு திட்டத்தைத் தொடங்கி வைத்த பிறகு டாக்டர் மகாதீர் இந்த அறைகூவலை விடுத்துள்ளார்.
மலேசியாவின் வளப்ப பகிர்வு தொலைநோக்கு திட்டம் உயர் ஆற்றல்களிலும் தொழில்நுட்பத் துறைகளிலும் மலாய்க்காரர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் இலக்கு கொண்டுள்ளது.
அசுத்தமான, ஆபத்தான, சிரம மான வேலைகளை வெளிநாட்டினர் செய்ய விட்டுவிட்ட வரலாற்றுக் குறிப்புகளிலிருந்து மலாய்க்காரர்கள் படிப்பினைகளைக் கற்றுக் கொள்ளத் தவறிவிட்டதால் அவர் களும் பின்தங்கிவிட்டனர் என்றார் 94 வயது பிரதமர்.
"வேலை செய்து செல்வத்தைப் பெருக்கிக்கொள்வோரைச் சார்ந்து உள்ளோம். இந்த வேலைகளை வெளிநாட்டினர் செய்ய அனுமதித் தால் காலப்போக்கில் நாம் இன்னும் பின்தங்கி விடுவோம்," என்று பிர தமர் மகாதீர், பெரும்பாலும் பட்டக் கல்வி மாணவர்களைக் கொண்ட 10,000 பங்கேற்பாளர்கள் முன்னி லையில் மலாய் கண்ணிய மாநாட் டில் பேசினார்.
"மாதத்துக்கு 1,200 ரிங்கிட் (S$395) சம்பளம் கொடுக்கும் வேலையைச் செய்ய மலாய்க்காரர் கள் மறுக்கிறார்கள். இதை நாம் வெட்கத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.
"அதேவேளையில் அரசாங்கம் ஓராண்டுக்குக் கொடுக்கும் 500 ரிங்கிட்டை நாம் பெருமையுடன் ஏற்றுக்கொள்கிறோம்," என்று டாக் டர் மகாதீர் முன்னைய அரசாங்கம் மலேசிய மக்கள் தொகையில் பாதிப் பேருக்கு இந்த உதவித் தொகை யைக் கொடுத்ததை மேற்கோள் காட்டி சாடினார். தங்களுக்குப் பதவி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மலாய்க்காரர்கள் வெவ்வேறு கட்சிகளில் சேர்கின்றனர். மக்கள் தொகையில் 60 விழுக்காட்டை மலாய்க்காரர்கள் கொண்டிருந்தாலும், அரசாங்கத்தை அமைக்க நாம் மற்ற இனங்களின் ஆதரவைச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. இது நமக்கு நாமே ஏற்படுத்திக்கொண்ட நிலைமை. இதை மற்றவர்கள் நமக்கு ஏற்படுத்த வில்லை. இந்த பிளவுக்கு நாம்தான் காரணம்," என்றும் பிரதமர் மகாதீர் தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் பிகேஆர் கட்சி யின் துணைத் தலைவர் அஸ்மின் அலி, பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங், பிரதமர் மகாதீர் முகம்மது, அம்னோ கட்சி யின் தலைமைச் செயலாளர் அன்வார் மூசா போன்ற முன்னணி மலாய் தலைவர்கள் பங்கேற்றனர்.

