அணுவாயுதக்களைவு பற்றிய பேச்சை முறித்துக்கொண்டது வடகொரியா

அணுவாயுதக்களைவு பற்றிய பேச்சை முறித்துக்கொண்டது வடகொரியா

1 mins read
11ca85b7-0240-4822-8574-aa5717f879e7
சுவீடனின் ஸ்டாக்கோம் நகரிலுள்ள வடகொரியத் தூதரகத்தில் வெளியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும் வடகொரிய தலைவர் கிம் மியோங் கில். படம்: ராய்ட்டர்ஸ் -

ஸ்டாக்கோம்: அமெரிக்காவும் வடகொரியாவும் நேற்று முன்தினம் சுவீடனில் அணுவாயுதக் களைவு குறித்து பேச்சு வார்த்தை நடத்தின. ஆனால் அந்தப் பேச்சுவார்த்தையை வடகொரியா பாதியில் முறித்துக்கொண்டது. "அமெரிக்கா தனது பிடிவாதப் போக்கைத் தளர்த்திக்கொள்ள மறுக்கிறது. வடகொரியாவை முன்பு அது நோக்கிய அதே கோணத்தில்தான் இன்னமும் பார்க்கிறது. இந்த பேச்சுவார்த்தை எங்கள் எதிர்பார்ப்பை நிறைவுசெய்யவில்லை. எனவேதான் பேச்சுவார்த்தை பாதியில் நின்றது," என்று வடகொரியத் தலைவர் கிம் மியோங் கில் கூறியுள்ளார்.