துபாய்: ஈரானின் கச்சா எண்ணெய்யை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான அனைத்து வழிகளையும் ஈரான் ஆராய்ந்து வருவதாக அந்நாட்டு எண்ணெய் வள அமைச்சின் இணையத்தளத்தில் எண்ணெய் வள அமைச்சர் பைஜன் ஸங்கனே நேற்று அறிவித்தார். கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வது என்பது எங்களது உரிமை என்றும் அவர் தெரிவித்தார். ஈரான் அணுவாயுத ஒப்பந்தத்தை மீறியதாக அதன் மீது அமெரிக்கா, 2015ல் வர்த்தகத் தடை விதித்தது.
அந்தத் தடையால் அந்நாடு கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 80 விழுக்காடு சரிவைக் கண்டுள்ளது. ஈரானின் பொருளியலை அமெரிக்காவிடம் இருந்து தற்காப்பதற்கு ஐரோப்பிய நாடுகள் அளித்திருந்த வாக்குறுதி காக்கப்பட்டால்
படிப்படியாக அணுவாயுத நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்வோம் என ஈரான் தெரிவித்தது.

