பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் தனியார் நிறுவனங்களில் ஊழியர்களுக்கு இரண்டு மாத பேறுகால விடுப்பு அளிக்கப்படுகிறது. அதை 98 நாட்களாக ஆக்க வேண்டும் என்று அந்நாட்டின் மனிதவள அமைச்சு பரிந்துரைத்துள்ளது
கூடுதலாக அளிக்கப்படும் 38 நாட்களில் 19 நாட்களுக்கு ஊழியர்களுக்கு நிறுவனம் சம்பளம் அளிக்க வேண்டும் என்றும் எஞ்சிய 19 நாட்கள் சம்பளமில்லா விடுப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சின் பரிந்துரையில் கோரப்பட்டுள்ளது. அரசாங்கச் சேவையில் உள்ள பெண்களுக்கு மூன்று மாத காலம் பேறுகால விடுப்பு அளிக்கப்படுகிறது.

