மாஸ்கோ: பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின், சைபீரியா நாட்டின் வனப்பகுதியில் உற்சாகமாக நடைபயணம் மேற்கொண்டதைக் காட்டும் காணொளிகள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன.
திரு புட்டின் தமது 67வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இந்நிலையில், விடுமுறையைக் கழிக்க சில தினங்களுக்கு முன்பாக சைபீரிய வனப்பகுதிக்குச் சென்ற அவர், அங்குள்ள உயரமான மலைப்பகுதிகளில் ஏறி உற்சாகமாகப் நடைபயணம் மேற்கொண்டார்.
பரபரப்பான அலுவல் பணிகளி
லிருந்து சற்று ஓய்வு எடுத்துக்கொள்ளும் விதமாக இந்த சாகசப் பயணத்தை மேற்கொண்ட திரு புட்டின், தம்முடன் சில உயர் அதிகாரிகளை மட்டும் அழைத்துச் சென்றதாக உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டன.
வனப்பகுதியில் உள்ள விதவிதமான செடி கொடிகளை திரு புட்டின் ஆர்வத்துடன் பார்வையிட்டு மகிழ்ந்தார்.
வனப்பகுதியில் வாகனம் ஒன்றை ஓட்டி மகிழ்ந்த அவர், ரம்மியமான இடங்களைத் தேர்வு செய்து பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டார்.

