ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய திட்டமிடும் 'எச்எஸ்பிசி' வங்கி

ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய திட்டமிடும் 'எச்எஸ்பிசி' வங்கி

1 mins read

லண்டன்: செலவுகளைக் குறைக்கும் நோக்கில் உலகெங்கும் ஏறத்தாழ 10,000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய 'எச்எஸ்பிசி' வங்கி திட்டமிட்டுள்ளது. அதிகச் சம்பளம் பெறும் ஊழியர்கள் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்படுவர் எனக் கூறப்படுகிறது. 'ஃபைனான்ஷியல் டைம்ஸ்' நாளிதழ் இந்தச் செய்தியை வெளியிட்டது.

ஹாங்காங்கின் பதற்றமான சூழல், அமெரிக்க-சீன வர்த்தகப் போர், பிரெக்சிட் விவகாரம் ஆகியவற்றைக் கோடிகாட்டி ஆட்குறைப்பு நடவடிக்கையை அவ்வங்கி அறிவித்தது.