மருத்துவத்துக்கான நோபல் பரிசு

மருத்துவத்துக்கான நோபல் பரிசு

1 mins read

ஸ்டாக்ஹோல்ம்: இந்த ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு, உடலில் இருக்கும் உயிரணுக்கள் உயிர்வளியை (ஆக்ஸிஜன்) எவ்வாறு உட்கிரகிக்கின்றன என்பதைக் கண்டுபிடித்த மூவருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் ஜி கேலின், கிரெக் செமன்கா, பிரிட்டனைச் சேர்ந்த சர் பீட்டர் ராட்கிளிஃப், ஆகிய மூவருக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

உயிரணுக்களின் வளர்சிதை மாற்றம், உயிரணுக்களின் அளவுகளுக்கும், உயிர்வளி கிடைக்கும் அளவுக்கும் இடையே இருக்கும் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்த ஆராய்ச்சியில் அடங்கும்.

புற்றுநோய் உள்ளிட்ட முக்கிய நோய்களைப் பற்றிய ஆராய்ச்சிக்கு இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் மிகுந்த பயனளிக்கும் என்பதால் இம்மூன்று விஞ்ஞானிகளுக்கும் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது.