28 சீன நிறுவனங்களுக்குத் தடை விதித்த அமெரிக்கா

28 சீன நிறுவனங்களுக்குத் தடை விதித்த அமெரிக்கா

1 mins read
e6021b0d-bcde-4321-b40f-93b674dc30ab
சீனாவின் கண்காணிப்புக் காணொளி நிறுவனமான ஹைக்விஷன் உட்பட 28 நிறுவனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்த்தது அமெரிக்கா. படம்: ராய்ட்டர்ஸ் -

சீனாவின் 28 பொதுப் பாதுகாப்பு அமைப்புகள், நிறுவனங்களைக் கறுப்புப் பட்டியலில் சேர்ப்பதாக அமெரிக்காவின் வர்த்தகத் துறை நேற்று (அக்டோபர் 7) தெரிவித்தது.

சீனாவின் கண்காணிப்புக் காணொளி நிறுவனமான ஹைக்விஷன் நிறுவனமும் அதில் ஒன்று. உய்கர் முஸ்லிம்கள், பிற முஸ்லிம் சிறுபான்மை இனத்தவரை சீனா நடத்தும் முறையே இந்தத் தடைக்குக் காரணமாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

அந்த நிறுவனங்கள் மனித உரிமை மீறல்களைப் புரிந்துள்ளதாக அது குறிப்பிட்டது.

கறுப்புப் பட்டியலில் இணைக்கப்பட்ட அமைப்புகள், நிறுவனங்கள் அமெரிக்க அரசாங்கத்தின் அனுமதியின்றி அமெரிக்க நிறுவனங்களிலிருந்து பொருட்கள், உதிரி பாகங்களை வாங்க முடியாது.

இந்த வாரம் நடைபெறும் அமெரிக்கா, சீனா பேச்சுவார்த்தைகளுக்கும் இந்தத் தடைக்கும் தொடர்பில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கு முன்பு ஹுவாவெய் டெக்னாலஜீஸ் நிறுவனம் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.