ஹாங்காங் கண்காட்சியில் $34 மில்லியனுக்கு விலைபோன கார்ட்டூன் ஓவியம்

ஹாங்காங் கண்காட்சியில் $34 மில்லியனுக்கு விலைபோன கார்ட்டூன் ஓவியம்

1 mins read
567af8b7-9765-4d78-b647-251581f1806b
ஹாங்காங்கில் நடைபெற்ற கண்காட்சி ஒன்றில் 'நைஃப் பிஹைண்ட் பேக்' என்று தலைப்பிடப்பட்ட 'கார்ட்டூன் பெண்' ஓவியம் S$34.36 மில்லியனுக்கு விற்கப்பட்டது. படம்: சோத்பை நிறுவன இணையப்பக்கம் -

ஜப்பானிய ஓவியர் யோஷிடோமோ நாரா வரைந்த 'கார்ட்டூன் பெண்' ஓவியம் 24.9 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (S$34.36 மில்லியன்) ஏலத்தில் விற்கப்பட்டது.

ஹாங்காங்கில் நடைபெற்ற கண்காட்சி ஒன்றில் நேற்று முன்தினம் (அக்டோபர் 6) 'நைஃப் பிஹைண்ட் பேக்' என்று தலைப்பிடப்பட்ட அந்த ஓவியம் ஏலத்துக்கு வந்தது.

கடந்த சனிக்கிழமை சீன ஓவியர் சான்யூ வரைந்த நிர்வாணப் பெண் ஓவியம் 25.2 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (S$34.77 மில்லியன்) விற்பனையானது. அது 19 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

நகரின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வந்தாலும் ஹாங்காங்கின் வான் சாய் பகுதியில் உள்ள மாநாட்டு மண்டபத்தில் சோத்பை நிறுவனத்தின் ஏலக் கண்காட்சியில் கூட்டம் குறையவில்லை என்று கூறப்பட்டது.