ஐக்கிய நாடுகள் சபையிலும் நிதிப் பற்றாக்குறை; செலவு குறைப்பு நடவடிக்கைகள்

ஐக்கிய நாடுகள் சபையிலும் நிதிப் பற்றாக்குறை; செலவு குறைப்பு நடவடிக்கைகள்

1 mins read
eaf81f23-e82d-4193-9b73-a6e4129b54ba
தற்போது 230 மில்லியன் அமெரிக்க டாலர் (S$317 மில்லியன்) அளவுக்கு பற்றாக்குறை இருப்பதாக ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் குறிப்பிட்டார். படம்: ஏஎஃப்பி -

ஐக்கிய நாடுகள் சபையிலும் நிதிப் பற்றாக்குறை நிலவுகிறது. தற்போது 230 மில்லியன் அமெரிக்க டாலர் (S$317 மில்லியன்) அளவுக்கு பற்றாக்குறை இருப்பதாக ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் நேற்று (அக்டோபர் 7) குறிப்பிட்டார்.

ஐநா சபையின் 37,000 ஊழியர்களுக்கு திரு குட்டரஸ் எழுதிய கடிதத்தில், ஊழியர்களுக்கு ஊதியம் அளிப்பதை உறுதிசெய்ய, செலவு குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதாக ஏஎஃப்பி தெரிவித்தது.

ஐநா சபையின் உறுப்பு நாடுகள், சபையின் வரவுசெலவுத் திட்ட கணக்கில் 70% மட்டுமே வழங்கியுள்ளதாகவும் அதனால் 230 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு துண்டுவிழுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனால், சேமிப்பில் இருக்கும் பணத்தைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

செலவு குறைப்பு நடவடிக்கையாக, சந்திப்புகள், மாநாடுகள் போன்றவை தள்ளி வைக்கப்பட்டதுடன், சேவைகளும் குறைத்துக்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், அத்தியாவசியமான பயணங்களை மட்டுமே அதிகாரிகள் மேற்கொள்வதாகக் கூறப்பட்டது.

உறுப்பு நாடுகளிடம் கூடுதல் நிதி கோரப்பட்டதாகவும், ஆனால் அவை மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

ஐநாவின் 2018-2019க்கான நடைமுறைச் செலவு $5.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள்; அதில் 22%ஐ அமெரிக்கா வழங்குகிறது.