சீனாவில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சீனத் தலைவர்களுடன் முக்கிய பேச்சு

சீனாவில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சீனத் தலைவர்களுடன் முக்கிய பேச்சு

1 mins read
c3bcd825-6d11-491d-a90d-c79e30167567
சீனா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சீனப் பிரதமர் லி கெச்சியாங் ஆகியோர் முன்னிலையில் இரு நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. படம்: ஏஎஃப்பி -

பெய்ஜிங்: சீன அதிபர் ஸி ஜின்பிங் இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் வேளையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சீனாவுக்குச் சென்றுள்ளார்.

பெய்ஜிங் விமான நிலையத்தில் பிரதமர் இம்ரான் கானை சீனாவின் அமைச்சர், பாகிஸ்தான் நாட்டிற்கான சீனாவின் தூதர் உட்பட பலர் வரவேற்றனர்.

சீனப் பிரதமர் லி கெச்சியாங்கை இம்ரான் கான் சந்தித்துப் பேசினார். பின்னர் இரு தலைவர் களின் முன்னிலையில் இரு நாடுகளுக்கு இைடயிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

சீன அதிபர் ஸி ஜின்பிங்கையும் இம்ரான் கான் சந்தித்துப் பேசுகிறார். இந்தச் சந்திப்பில் இருதரப்பு உறவு, வர்த்தக உறவு பற்றி பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்புத் தகுதியை இந்திய அரசு ரத்து செய்ததிலிருந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் நிலவுகிறது. இந்த நிலையில் இம்ரான் கான் சீனத் தலைவர்களைச் சந்தித்து வருகிறார்.

இம்மாதம் 11ஆம் தேதி இந்தியா வரும் சீன அதிபர் ஸி ஜின்பிங், சென்னை மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியைச் சந்திக்கிறார்.