சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்குச் செல்லும் அனைத்து வாகனங்களுக்குமான வாகன நுழைவு அனுமதி முறை (விஇபி) அடுத்தாண்டின் தொடக்கத்திற்கு முன்னர் செயல்படுத்தப்படாது என்று மலேசியப் போக்குவரத்து அமைச்சர் அண்டனி லோக் தெரிவித்திருக்கிறார்.
"ஆர்எஃப்ஐடி எனப்படும் வானலை அடையாளக் கருவிகளைப் பொருத்துவதில் ஏற்பட்டுள்ள சில விவகாரங்களால் வாகன நுழைவு அனுமதி முறையின் செயலாக்கத்தை நாங்கள் தாமதப்படுத்தியுள்ளோம். ஆர்எஃப்ஐடி பொருத்தப்படவேண்டிய வாகனங்களின் எண்ணிக்கையை இந்தக் கட்டமைப்பால் சமாளிக்க முடியவில்லை" என்று திரு லோக், வாகன நுழைவு அனுமதி முறைக்கான வானலை அடையாளத்தைப் பற்றிக் குறிப்பிட்டுக் கூறினார்.
அனைத்து வாகனங்களும் ஆர்எஃப்ஐடி பொருத்துவதைச் சுலபமாக்கும் ஒரு புதிய முறையைத் தமது அமைச்சு உறுதிப்படுத்துவதாக அவர் கூறினார். புதிய மாற்றத்திற்குத் தயாராக அனைவருக்கும் போதிய அவகாசம் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

