பாரிஸ், பிரான்ஸ்: புகைப்பிடிப்பதற்காக பாரிஸில் தான் தங்கியிருந்த ஹோட்டலைவிட்டு வெளியேறிய ஜப்பானிய ஆடவரிடமிருந்து 840,000 டாலர் (1.2 மில்லியன் வெள்ளி) மதிப்புள்ள கைக்கடிகாரம் திருடப்பட்டது. பழம்பெரும் 'லாக் டெ தியோம்ஃப்' நுழைவாயிலுக்கு அருகிலுள்ள ஹோட்டல் நெப்போலியனில் தங்கியிருந்த அந்த 30 வயது ஆடவரிடம் சிகரெட் கேட்டு ஒருவர் அணுகினார். அவ்வாறு வந்த அந்தத் திருடன், உடனே அந்த ரிச்சர்ட் மில் கைக்கடிகாரத்தைப் பறித்துக்கொண்டு ஓடினான்.
திருடன் ஓடிக்கொண்டிருந்தபோது அவனது கைப்பேசி தவறுதலாகத் தரையில் விழுந்தது. திருட்டைப் புகார் செய்த ஜப்பானிய சுற்றுப்பயணி அதனைப் போலிசாரிடம் ஒப்படைத்தார்.
இவ்வாண்டு ஜனவரிக்கும் செப்டம்பருக்கும் இடையே பாரிஸில் திருடப்பட்ட கைக்கடிகாரங்களில் நான்கு ரிச்சர்ட் மில் கடிகாரங்கள்.

